3 லிட்டர் கசிப்பு மற்றும் 16 லிட்டர் கோடாவினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது

Kanimoli
3 years ago
 3 லிட்டர் கசிப்பு மற்றும் 16 லிட்டர் கோடாவினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை ஊரிப் பகுதியில் 3 லிட்டர் கசிப்பு மற்றும் 16 லிட்டர் கோடாவினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவரை ஊர்காவற்துறை காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட சிறுவனை விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் முற்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில், அச்சுவேலி பகுதியில் அமைந்துள்ள சான்று பெற்ற சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் குறித்த சிறுவனை ஒப்படைக்குமாறு யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4