கொவிட் கால ஜனாஸா எரிப்பு விவகாரம்: விசாரணை கோரி சபாநாயகரிடம் 20க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் கடிதம்!

#SriLanka #Lanka4 #Investigations #funeral #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
கொவிட் கால ஜனாஸா எரிப்பு விவகாரம்: விசாரணை கோரி சபாநாயகரிடம் 20க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் கடிதம்!

கொவிட் காலத்தில் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் கட்டாயமாக எரிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தக் கோரும் பிரேரணையை பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் ஆராயுமாறு வலியுறுத்தி, 20க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கோரிக்கைக் கடிதம் இன்று (19.08.2026) சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 8ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் முன்வைத்த பிரேரணையை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இம்ரான் மகரூப், முஜிபுர் ரஹ்மான், காதர் மஸ்தான், எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் அப்துல் வாசித் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரைச் சந்தித்து கடிதத்தைக் கையளித்தனர்.

கொவிட் கால கட்டாய தகனங்கள் தொடர்பில் முறையான, சுயாதீனமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4