உக்ரைனில் மக்கள் சென்ற வாகனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய ரஷ்யா - 23 பேர் உயிரிழப்பு

#Russia #Attack #Ukraine #Death
Prasu
2 years ago
உக்ரைனில் மக்கள் சென்ற வாகனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய ரஷ்யா - 23 பேர் உயிரிழப்பு

உக்ரைனின் ஜபோரிஜியா நகரில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதல்களில் 23 பேர் கொல்லப்பட்டனர். 28 பேர் காயமடைந்துள்ளனர். 

இதுதொடர்பான அறிவிப்பை ஜபோரிஜியா பிராந்திய ஆளுநர் ஸ்டாருக் ஆன்லைன் வாயிலாக வெளியிட்டுள்ளார். 

ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை நோக்கி மக்கள் சென்ற வாகனங்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறி உள்ளார். 

இது தொடர்பாக அவர் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். தாக்குதலில் சிக்கிய வாகனங்கள் தீப்பற்றி எரிவதையும், சாலையில் உடல்கள் கிடப்பதையும் அந்த படங்களில் காண முடிகிறது. 

இதுதொடர்பாக ரஷியா தரப்பில் உடனடியாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!