சிங்கப்பூர் விமானத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் - திடீரென தரையிறக்கப்பட்ட விமானம்
#Singapore
Prasu
2 years ago

வெடிகுண்டு பீதியால் விமானம் ஒன்று திடீரென தரையிறக்கப்பட்டது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் சிங்கப்பூரில் இருந்து பதிவாகியுள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று திடீரென தரையிறங்கியுள்ளது.
அங்கு சென்று கொண்டிருந்த பயணி ஒருவர் திடீரென தனது பயணப் பையில் வெடிகுண்டு இருப்பதாக கூறினார்.
பாதுகாப்பு நடவடிக்கையாக சாங்கி விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க விமான ஊழியர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.
இதனையடுத்து சந்தேக நபரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
எனினும், அங்கு நடத்தப்பட்ட சோதனைகளின் போது அவரிடம் வெடிகுண்டு இல்லை என்பது பின்னர் தெரியவந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



