அணுவாயுதங்களைப் பயன்படுத்தவிருப்பதாக மீண்டும் மிரட்டல் விடுத்த ரஷ்யா - அதிர்ச்சியில் உக்ரைன்

ரஷ்யா அணுவாயுதங்களைப் பயன்படுத்தவிருப்பதாக மீண்டும் மிரட்டல் விடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போர்க்களத்தில் தோல்வியைச் சந்தித்த பிறகு அந்த மிரட்டல் விடுக்கப்பட்டது. ரஷ்யாவுக்கு நெருக்குதல் அளிக்கப்பட்டால் தன்னைத் தற்காத்துக்கொள்ள அதற்கு உரிமை இருப்பதாக அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ் (Dmitry Medvedev) கூறியிருக்கிறார்.
நேட்டோ கூட்டணித் தலைமைச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பர்க் (Jens Stoltenberg) போரை மேலும் மோசமாக்குவதைத் தவிர்க்கும்படிக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
அணுவாயுதங்களைக் கொண்டு ஒருபோதும் போர் நடத்தப்படக்கூடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யா உக்ரேனின் கிழக்குப் பகுதியைக் கைப்பற்ற பெரிய அளவில் படை திரட்டும் வேளையில் அணுவாயுதம் குறித்த பேச்சு எழுந்துள்ளது.
ரஷ்யா உக்ரேனின் 4 பகுதிகளில் வாக்கெடுப்புகளை நடத்தியிருக்கிறது. ஆனால் அவற்றை அங்கீகரிக்க உக்ரேனும் மேற்கத்திய நாடுகளும் மறுத்துள்ளன.



