தியாகதீபம் திலீபனின் 35வது நினைவு தினம் வவுனியா நினைவேந்தப்பட்டது

Kanimoli
2 years ago
தியாகதீபம் திலீபனின் 35வது நினைவு தினம் வவுனியா நினைவேந்தப்பட்டது

தியாகதீபம் திலீபனின் 35வது நினைவு தினம் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்று நினைவேந்தப்பட்டது.

அவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக அமைந்துள்ள கொட்டகையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் திலீபனின் படத்திற்கு மலர்தூவி, ஈகைசுடர் ஏற்றி அஞ்சலி நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில், கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் தியாகதீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாள் இன்றைய தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார், மத தலைவர்கள், மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!