ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கு ஜனாதிபதி நாளை பயணம்

ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை முற்பகல் நாட்டை விட்டுச் செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜப்பான் செல்லும் ஜனாதிபதி, மறைந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கிலும் கலந்து கொள்ள உள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானிய பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிலிப்பைன்ஸிலிருந்து புறப்பட உள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்களின் கூட்டத்திற்கு ஜனாதிபதியும் தலைமை தாங்குவார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பொன்போங் மார்கோஸ் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் சட்சுகு அசகாவா ஆகியோரும் கலந்துரையாடவுள்ளனர்.
இந்த விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 30ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார்.



