யாழ்ப்பாணத்தில் அதிகளவு போதைப்பொருளை எடுத்துக் கொண்ட மற்றொருவர் பலி

Kanimoli
2 years ago
யாழ்ப்பாணத்தில் அதிகளவு  போதைப்பொருளை எடுத்துக் கொண்ட மற்றொருவர் பலி

யாழ்ப்பாணத்தில் அதிகளவு ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக் கொண்ட மற்றொருவர் உயிரிழந்துள்ளார்.

பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே சனிக்கிழமை (24) அதிகாலை உயிரிழந்தார் என்று இளவாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“கடந்த சில தினங்களுக்கு முன்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பிய அவர் ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் பயன்படுத்தியதனால் உயிரிழந்தார்.

மருத்துவ பரிசோதனையிலும் அவரது உயிரிழப்புக்கு ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவு எடுத்துக் கொண்டமையே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் கூலிக்காகஹெரோயின் போதைப்பொருள் விற்பனையிலும் ஈடுபட்டு வந்துள்ளார்” என்றும் பொலிஸார் கூறினர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 10 இற்கும் மேற்பட்டோர் ஹெரோயினுக்கு அடிமையாகி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!