பெற்றோருடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டமைக்காக 14 வயது சிறுவன் கைது - ஹரிணி அமரசூரிய
#SriLanka
#Protest
#Arrest
Prasu
2 years ago
பெற்றோருடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டமைக்காக 14 வயது சிறுவன் ஒருவனும் நேற்று கைதுசெய்யப்பட்டான் என ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். பெற்றோருடன் ஆர்ப்பாட்டத்த்தில் கலந்துகொண்ட 14 வயது சிறுவனையும் கைதுசெய்துள்ளனர், தடுப்பில் சிறுவனை பார்த்த சட்டத்தரணிகள் உடனடியாக தலையிட்டு சிறுவனை விடுதலை செய்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
17 வயது யுவதியொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார் என ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.



