சிறுபோகத்தில் சோள உற்பத்தியை அதிகரித்து விலங்குணவு விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை - மகிந்த அமரவீர

Prasu
2 years ago
சிறுபோகத்தில் சோள உற்பத்தியை அதிகரித்து விலங்குணவு விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை - மகிந்த அமரவீர

கோழித் தீனி விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக  விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

பேராதணை மிருக உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தில் 24 ஆம் திகதி சனிக்கிழமை இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாந்நும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது;

அடுத்த சிறுபோக பயிர் செய்கையின்  போது  சோள உற்பத்தியை அதிகரிக்க திட்டமிப்பட்டுள்ளது.

இதன் மூலம் விலங்குணவு உற்பத்தியை அதிகரித்து கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை ஏற்றத்தைக் குறைக்க முடியும்.

இன்று கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை ஏற்றத்தில் விலங்குணவு விலையேற்றம் முக்கிய பங்களிப்பை செலுத்துநிறது.

கோழிப் பண்ணையாளர்கள் அதிக விலை கொடுத்து கோழித் தீணி போன்றவற்றை கொள்வனவு செய்வதன் காரணமாக அவர்களது உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது.

எனவே விலங்குணவுக்கான  செலவினத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் கோழி மற்றும் முட்டை விலையேற்றத்தை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார். 

எனவே அடுத்த சிறுபோகத்தின் போது சோள உற்றப்பியை அதிகரிக்க நடவடிக்கடைுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!