இலங்கையின் புதிய அரசாங்கம் நிதி ஒழுக்கம், பொருளாதார மற்றும் நிர்வாக சீர்திருத்தம் விடயத்தில் அர்ப்பணிப்புடன் உள்ளது - அலி சப்ரி
Reha
2 years ago

இலங்கை எதிர்கொள்ளும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்கள், அரசியல், சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை செயற்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77 ஆவது அமர்வில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செயற்பாடு இலங்கை மக்களின் மீட்சி மற்றும் செழிப்புக்கு வழிவகுக்கும் எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய அரசாங்கம் நிதி ஒழுக்கம், பொருளாதார மற்றும் நிர்வாக சீர்திருத்தம் விடயத்தில் அர்ப்பணிப்புடன் உள்ளது.
அத்துடன் கருத்து சுதந்திரத்தை அங்கீகரிக்கும் அதேவேளையில் அது அரசியலமைப்பின் வரம்புகளுக்குள் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.



