அமெரிக்காவில் கொரோனா வைரஸ் ஆபத்து முடிவுக்கு வந்தது- அதிகாரபூர்வமாக அறிவித்தார் ஜனாதிபதி ஜோ பைடன்
#America
#Covid 19
#Biden
Prasu
3 years ago
உலகம் முழுவதும் பரவிய கொரோனா அமெரிக்காவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசி போன்ற நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் எடுத்தன.
இதனால் படிப்படியாக கொரானா தொற்றில் இருந்து உலக நாடுகள் மீண்டு வருகிறது.
இந்த நிலையில் கொரனோ தொற்றின் பேராபத்து அமெரிக்காவில் முடிவுக்கு வந்து விட்டதாகவும், கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் அந்நாட்டு அதிபர் ஜோபைடன் அறிவித்து உள்ளார்.