இங்கிலாந்து ராணி கமிலாவின் முக ஒப்பனை தொடர்பில் வெளியான பகீர் தகவல்

தனது வயதாவதை எதிர்த்துப் போராடவும், தன்னுடைய இளமை தோற்றத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் முகத்திற்குத் தேனீக்களின் விஷத்தை இங்கிலாந்து ராணி கமிலா உபயோகிக்கிறாராம்.
வயோதிபம் என்பது காலத்தின் கட்டாயம். இந்த உலகில் பிறந்த அனைவரும் ஒருநாள் வயதான நிலையை எட்டுவோம். கன்னங்கள் சுருங்கி, நரைகூடி, கிழப்பருவம் அடைவது என்பது இயற்கையாகவே நடக்கும்
அப்படியிருந்தும், எப்போதும் தங்களை இளமையாக வைத்திருக்கப் பலரும் பலவகையான அழகியல் பொருட்களை மேற்கொள்கிறார்கள்.
அதுவும் அரச குடும்பத்தில் இருப்பவர்கள், தங்களை மக்களிடையே அழகாகக் காட்டிக் கொள்ளத் தனித்துவமான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.
அத்தகைய புதுவிதமான முயற்சியைத்தான், இங்கிலாந்து ராணி கமிலா மேற்கொள்கிறார்.
தன்னுடைய மாமியாரான இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்குப் பின்னர், அரச குடும்பத்தின் குயின் கன்சோர்ட் ஆனார், கமிலா (Queen consort camilla). இவருக்கு தற்போது 75 வயதாகிறது.
இந்த நிலையிம் வயதாவதை எதிர்த்துப் போராடவும், தன்னுடைய இளமை தோற்றத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் முகத்திற்குத் தேனீக்களின் விஷத்தை உபயோகிக்கிறாராம் இங்கிலாந்து ராணி கமிலா.
தென்கொரியாவில் அதிகம் விற்பனையாகும் அழகு சாதன பொருள்களில் தேனீ விஷமும் ஒன்று என கூறப்படுகின்றது. அதாவது தேனீயின் விஷ கிரீம் சுருக்கங்களைப் போக்கும் தன்மையைக் கொண்டது என குறிப்பிடப்பட்டுகின்றது.
அந்தவகையில் அமெரிக்காவின் மிட்செல் நிறுவனம், இந்த கிரீமை தயாரித்துள்ளது, அந்த கிரீமையே இங்கிலாந்து ராணி கமிலா பயன்படுத்துகிறாராம்.



