குருந்தூர் மலை நாளை பிக்குகளுக்கு கையளிப்பு ! நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்
Mayoorikka
2 years ago

நீதிமன்றில் முல்லைத்தீவு குருந்தூர் மலை தொடர்பான வழக்கு உள்ளது.இந்த நிலையில் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் குருந்தூர் மலையில் உள்ள 612 ஏக்கர் காணியை பிக்குகளுக்கும் விகாரைகளுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர்,
இந்த விடயம் தொடர்பில் நானும்,நாடளுமன்ற உறுப்பினரர் சார்ல்ஸ்சும் இன்று காலை துறை சார்ந்த அமைச்சரை சந்தித்து கதைத்தோம்.
காணி அளவீடு தொடர்பில் அமைச்சர் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்.
பின்னர் தொலைபேசி ஊடாக தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்துக்கு அளவீட்டு பணிகளை நிறுத்துமாறு கூறினார்.
நாளை தான் தெரியும் அமைச்சரின் பணிப்புரைக்கு என்ன நடக்கப் போகிறது. இந்த நிலையில் தேசிய சபை ஒன்றை அமைப்பதில் எமக்கு உடன்பாடு இல்லை என்றார்.



