8 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் 892.8 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டிய இலங்கை
#SriLanka
#Tourist
#Dollar
Prasu
2 years ago

2021 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையான 08 மாத காலப்பகுதியில் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை ஈட்டிய வருமானம் 892.8 மில்லியன் டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 2022 இல், சுற்றுலா வருவாய் 67.9 மில்லியன் டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
2022 ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 37,760 ஆகவும், ஆண்டின் முதல் 8 மாதங்களில் வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 496,430 ஆகவும் உள்ளது.



