கசினோ சூதாட்ட நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானம்

Kanimoli
2 years ago
 கசினோ சூதாட்ட நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானம்

புதிய கசினோ சூதாட்ட நிறுவனங்களுக்கு அனுமதி ப்பத்திரம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வர்த்தமானி அறிவித்தல்
கசினோ சூதாட்டத்தை சட்ட ரீதியானதாக மாற்றுதல் மற்றும் அதனை ஒழுங்குபடுத்தல், புதிய அனுமதிப்பத்திரம் வழங்குதல் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் கசினோ வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே தற்பொழுது அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

2010ம் ஆண்டு 17ம் இலக்க கசினோ வியாபாரம் குறித்த சட்டத்தின் பிரகாரம் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட வேண்டும்.

இதுவரையில் அனுமதிப் பத்திரம் வழங்கப்படாமைக்கான காரணம்
இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படாத காரணத்தினால் இதுவரையில் குறித்த சட்டத்தின் கீழ் எந்தவொரு நிறுவனத்திற்கும் அனுமதிப் பத்திரம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் புதிய கசினோ நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!