பொருளாதார பின்னடைவு காராணமாக பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு உதவ முன்வந்த கனடா!
Reha
2 years ago

இலங்கையின் தற்போதைய பொருளாதார பின்னடைவு காராணமாக பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்தவர்களுக்கு உதவ கனடா முன்வந்துள்ளது.
குறிப்பாக பெண்களினால் முன்னெடுக்கப்படும் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு ஏற்ற வகையிலான தொழிநுட்ப ஆலோசனைகள் உள்ளிட்ட உதவி ஒத்தாசைகளை கனடா வழங்கும் என, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டெனியல் பூட் தெரிவித்துள்ளார்.
இலங்கை வர்த்தக அமைப்புக்கள் கனேடிய வர்த்தக அமைப்புடன் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதன் மூலம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலதிக வருவாயையும் ஏற்படுத்த முடியும் என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டெனியல் பூட் குறிப்பிட்டார்.



