பாகிஸ்தானில் மர்ம கும்பல் தாக்குதல்- 4 போலீஸ்காரர்கள் சுட்டுக்கொலை

#Pakistan #GunShoot #Death
Prasu
2 years ago
பாகிஸ்தானில் மர்ம கும்பல் தாக்குதல்- 4 போலீஸ்காரர்கள் சுட்டுக்கொலை

பாகிஸ்தான் டேங்க் மாவட்டம் தில் இமாம் பகுதியில் போலியோ தடுப்பு முகாம் நடந்தது. இதையொட்டி மருத்துவ குழுவினர் நடமாடும் வாகனம் மூலம் வீடு, வீடாக சென்று போலீஸ் பாதுகாப்புடன் சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபட்டனர். 

அப்போது அங்கு வந்த மர்ம மனிதர்கள் திடீரென கையில் வைத்து இருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சரமாரியாக சுட்டனர். 

இதனை எதிர்பாராத போலீசார் பதிலுக்கு மர்ம கும்பல் மீது திருப்பி சுட்டனர். சிறிது நேரம் நடந்த இந்த துப்பாக்கி சண்டையில் 4 போலீஸ்காரர்கள் குண்டு பாய்ந்து இறந்தனர். 

2 போலீசார் படுகாயம் அடைந்தனர். போலீசாரை சுட்டுக்கொன்ற மர்ம மனிதர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். 

அவர்கள் யார்? எதற்காக இந்த செயலில் ஈடுபட்டனர் என தெரியவில்லை. குண்டுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 2 போலீஸ்காரர்கள் சிசிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்பி ஓடிய மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகின்றனர்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!