இலங்கைக்கு விவசாய உதவியாக 40 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்க சமந்தாபவர் ஒப்புதல்
Prathees
2 years ago

விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் மற்றும் இதர விவசாய இடுபொருட்களை வாங்க உதவும் துணைப் பொருட்கள் வளர்ச்சி நிர்வாகத்திற்கான 40 மில்லியன் டொலர்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் தலைவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்துள்ள சமந்தா பவர் இன்று (10) ஜா எல, ஏகல பிரதேச விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
இவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்த சமந்தா பவர் தலைமையிலான நான்கு பேர் கொண்ட அமெரிக்க தூதுக்குழுவினர், உரம் உள்ளிட்ட விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்கு 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக அறிவித்துள்ளனர்.



