ஜா-எலயில் விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடிய சமந்தா பவர்
Mayoorikka
2 years ago

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேம்படுத்துவது குறித்து அவர் தனது இந்த விஜயத்தில் ஆராயவுள்ளார்.
இந்நிலையில், ஜா எல சென்ற சமந்தா பவர், அங்குள்ள விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
உர பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை அவர் சந்தித்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடி மற்றும் உரமின்மை காரணமாக தமது விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல்களை எதிர்கொண்டதாக இதன்போது விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.



