நாட்டை வந்தடைந்தார் சமந்தா பவர்: பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஆராயவுள்ளார்

Mayoorikka
2 years ago
நாட்டை வந்தடைந்தார் சமந்தா பவர்: பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஆராயவுள்ளார்

இருநாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக சமந்தா பவர் இன்று காலை நாட்டை வந்தடைந்தார்.

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டத்தின் தலைமை அதிகாரி சமந்தா பவர் இருநாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இன்று காலை நாட்டை வந்தடைந்தார்.

இன்று மற்றும் நாளை நாட்டில் தங்கியிருக்கும் அவர், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஆராயவுள்ளார்.

அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள், தனியார்துறைசார் பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் தற்போதைய நெருக்கடியின் விளைவாகப் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்திக்கவுள்ள சமந்தா பவர், தற்போதைய நெருக்கடிகளால் மக்களின் வாழ்வாதாரம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும், இந்நெருக்கடியிலிருந்து அவர்கள் மீள்வதற்கும் தமது வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கும் அமெரிக்கா எவ்வாறு உதவமுடியும் என்பது குறித்தும் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.

அத்தோடு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!