இங்கிலாந்தில் உள்துறை அமைச்சராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சூலா பிரேவர்மென் நியமனம்

Prasu
2 years ago
இங்கிலாந்தில் உள்துறை அமைச்சராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சூலா பிரேவர்மென் நியமனம்

இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து முந்தைய போரிஸ் ஜான்சன் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரீத்தி பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

இந்த நிலையில் இங்கிலாந்தின் புதிய உள்துறை அமைச்சராக சூலா பிரேவர்மென்னை பிரதமர் லிஸ் டிரஸ் நியமித்துள்ளார். 

சூலா பிரேவர்மென், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இந்திய வம்சாவளி பெண் ஆவார். இவரது தாய் உமா தமிழ் நாட்டை சேர்ந்தவர். 

1960-ம் ஆண்டு காலகட்டத்தில் இந்திலாந்தில் குடியேறினார். அப்போது இங்கிலாந்தில் குடியேறிய கென்யாவை சேர்ந்த கிறிஸ்டி பெர்னாண்டஸ் என்பவரை உமா திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பிறந்தவர் தான் சூலா பிரேவர்மென்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!