இராஜாங்க அமைச்சர்கள் நாளை காலை பதவிப்பிரமாணம் செய்ய உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள்
Kanimoli
2 years ago

இராஜாங்க அமைச்சர்கள் நாளை(8) காலை பதவிப்பிரமாணம் செய்ய உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, சுமார் 35 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதேவேளை, இராஜாங்க அமைச்சர்கள் பதவிக்காக சிறிலங்கா பொதுஜன பெரமுனவினால் பரிந்துரைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் அக் கட்சி சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டாலும், இம்முறை அந்தந்த நோக்கங்களை வர்த்தமானியில் வெளியிட வேண்டாம் எனவும், இராஜாங்க அமைச்சர் தனது அமைச்சரவை அமைச்சருக்கு சொந்தமான அமைச்சின் கீழ் பணியாற்ற வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.



