போட்டியின்றி மிஸஸ் ஸ்ரீலங்காவாக தெரிவான உஷி பெரேரா

Prathees
3 years ago
போட்டியின்றி மிஸஸ் ஸ்ரீலங்காவாக தெரிவான உஷி பெரேரா

மிஸஸ் ஸ்ரீலங்கா 2022 போட்டி அண்மையில் நடைபெற்றது. இம்முறை மிக அழகான உஷி பெரேரா முடிசூடினார்.

அன்பான கணவர் மற்றும் இரண்டு மகன்களைக் கொண்ட உஷி, 17 ஆண்டுகளாக வெற்றிகரமாக குடும்ப வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

அவருக்கு கொடுக்கப்பட்ட கிரீடத்தின் மதிப்பு ஆறரை கோடி என சந்திமால் ஜயசிங்க தெரிவித்துள்ளார்

இந்த வருடம் மிஸஸ் ஸ்ரீலங்கா போட்டிக்கான போட்டி எதுவும் நடத்தப்படவில்லை.

நிகழ்வில் ஏற்பாட்டுக் குழுவால் முன்மொழியப்பட்ட போட்டியாளர் உஷி பெரேரா முடிசூட்டப்பட்டார்.

இங்கிலாந்தில் அழகுக்கலை நிபுணராக பணிபுரியும் இவர் போட்டியின்றி வெற்றி பெற்றார்

ஏற்பாட்டுக் குழு என்னை திருமதி ஸ்ரீலங்கா 2022 என்று பரிந்துரைத்தது. அதனால் எனக்கு இந்த கிரீடம் கிடைக்கும் என்று தெரியும். ஆனால் எனக்கு ஒரு பெரிய பொறுப்பு இருக்கிறது.

ஏனென்றால், எத்தனையோ அழகான பெண்கள் இருக்கும் நாட்டில், என்னை வெளிநாட்டில் இருந்து வரவழைத்து, இந்த கிரீடத்தை கொடுத்தால், போட்டியில் வெற்றி பெற்ற ஒருவரை விட, எனக்கு அதிக பொறுப்பு உள்ளது. இந்த கிரீடத்தை அப்படித்தான் பார்க்கிறேன் என உஷி பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4