துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் தொடர்பாக சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்
Mayoorikka
2 years ago

ஆங்காங்கே நடத்தப்படும் துப்பாக்கிச்சூடுகள், பல்வேறு இடங்களில் கண்டெடுக்கப்படும் சடலங்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடிதம் மூலம் பொலிஸ் மா அதிபருக்கு வலியுறுத்தியுள்ளது.
பகல் வேளைகளில் துப்பாக்கிச்சூடு நடத்தப்படுகின்றமை, காலி முகத்திடல் போன்ற நாட்டின் கேந்திர முக்கியத்துவம் பெற்ற இடங்களில் சடலங்கள் கண்டெடுக்கப்படுகின்றமை என்பன சட்டம் , ஒழுங்கிற்கு அச்சுறுத்துலாக அமையக்கூடும் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பாக பொலிஸார் துரித விசாரணைகளை மேற்கொண்டு, சந்தேகநபர்களை கைது செய்து, மக்கள் மத்தியில் உள்ள சட்டத்தின் மீதான நம்பிக்கையை நிலைநாட்ட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.



