கல்கிஸ்ஸ நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிச் சூடு
Prathees
2 years ago

கல்கிஸ்ஸ மாஜிஸ்திரேட் நீதிமன்ற வளாகத்தில் இன்று பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவரின் கூண்டு அருகே வந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு கல்கிஸ்ஸ பொலிஸாரால் நியமிக்கப்பட்ட வழக்கில் சாட்சியமளிக்கவந்த ஒருவரை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.



