எதிர்வரும் 9ஆம் திகதி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவுள்ள பொன்சேகா: பாதுகாப்பு தரப்பினர் கவனம்
Prathees
2 years ago

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி கொழும்புக்கு வந்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு சமகி ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்து தொடர்பில்
பாதுகாப்பு படையினர் கவனம் செலுத்தியுள்ளனர்.
ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இதனை தெரிவித்தார்.
அது தொடர்பில் கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பொன்சேகா தீவிரமான கருத்தை வெளியிட்டுள்ளதாகவும் அது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.



