பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் சரித்திரம் படைத்த இலங்கை - யுபுனுக்கு வெண்கலப் பதக்கம்
Prathees
2 years ago

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 22வது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் யுபுன் அபேகோன் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
அவர் நிகழ்வை 10.14 வினாடிகளில் முடித்தார், பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீ ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற முதல் இலங்கையர் என்ற பெருமையைப் பெற்றார்.
இதேவேளை, இந்த விளையாட்டு விழாவுடன் இணைந்து நடைபெற்ற பரா போட்டியில் இலங்கையின் பாலித ஹல்கஹவெல வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
ஆண்களுக்கான வட்டு எறிதலில் பாலித வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.



