சர்வகட்சி அரசாங்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது ஒருபோதும் அமைச்சு பதவிகளை ஏற்காது - செல்வம் அடைக்கலநாதன்

Kanimoli
3 years ago
சர்வகட்சி அரசாங்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது ஒருபோதும் அமைச்சு பதவிகளை ஏற்காது - செல்வம் அடைக்கலநாதன்

சர்வகட்சி அரசாங்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது ஒருபோதும் அமைச்சு பதவிகளை ஏற்காது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பானது சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை ஏற்குமா என செல்வம் அடைக்கலநாதனை வினவிய போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.

இதேவேளை, கூட்டமைப்பு சர்வகட்சி அரசில் அமைச்சு பதவிகளை ஏற்கும் என தவறான கருத்துக்களை சமூக ஊடகங்களில் பதிவிட வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதிபர் ரணில் விக்ரமசிங்க தமலையில் அமையவுள்ள சர்வகட்சி அரசாங்கத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதமொன்றை நேற்று அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், சர்வகட்சி அரசில் கூட்டமைப்பு அமைச்சு பதவிகளை ஏற்குமா இல்லையா என்ற கேள்வி அரசியல் அவதானிகள் பலரால் விவாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4