யாழ் போதனா வைத்தியசாலைக்கு திரு S.K.நாதன் அவர்களினால் 24 மில்லியன் பெறுமதியான மருந்து பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

Prasu
3 years ago
யாழ் போதனா வைத்தியசாலைக்கு திரு S.K.நாதன் அவர்களினால் 24 மில்லியன் பெறுமதியான மருந்து பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு  இன்று  நடைபெற்றது.

2 கோடி 40 லட்சம் பெறுமதியான மருத்து பொருட்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு S.K.நாதன் அவர்களினால் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் 21.07.2022 வழங்கப்பட்டு இன்று சுகாதார  அமைச்சில் இருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மருத்துவ பொருட்கள்  நன்கொடையாக கையளிக்கப்பட்டது

S.K.நாதன் அறக்கட்டளையின் முழுமையான நிதிப்பங்களிப்பினால் யாழ்போதனா வைத்தியசாலையினரின் அவசர கோரிக்கையை கருத்திற் கொண்டு 24 மில்லியன் பெறுமதியான மருந்துகளை அத்தியாவசிய மருந்து பொருட்கள் திரு.சுப்பிரமணியம் கதிகாமநாதன் அவர்களினால்  சுகாதார அமைச்சின் செயலாளர் திரு. எஸ்.ஜானக ஸ்ரீ சந்திரகுப்தா (S.Janaka Sri Chandraguptha) மற்றும் டொக்டர் அன்வர் ஹம்தானி Dr.Anvar Hamdani ஆகியோரிடம் உத்தியோக பூர்வமாக அமைச்சின் செயலகத்தில் 21.07.2022 அன்று S.K.நாதன் அவர்களினால் கையளிக்கப்பட்டது.

எனினும் ஒரு மாதத்திற்கு தேவையான அவ் மருந்துப் பொருட்கள் இன்று யாழ் போதனா வைத்தியசாலையை வந்தடைந்த நலையில் இன்றைய தினம் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திரு.த.சத்தியமூர்த்தி அவர்களிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது

இலங்கையில் தற்காலத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மருத்துவம் சார்ந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் மானுடம் மிக்க மருத்துவ சேவையை அதன் தேவை கருதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது

இன்று இலங்கையின் பல வைத்தியசாலைகளில் மருந்து பற்றாக்குறை நிலவும் அதேவேளை அவற்றை  பெற்றுக்கொள்வதிலும் பல இடர்பாடுகளும் சிரமமும் காணப்படுகின்றது பல வைத்தியசாலைகளில் சில மருத்துவ பொருட்கள் தீர்ந்து விட்டாதாகவும் அதனை பெற்றுத்தரும் படி கோரிக்கைகளை முன் வைத்துவரும் நிலையில் முன்னுதாரணமாக வடபகுதிக்கான மருத்துவ வளங்களில் அதிகூடிய கரிசனையுடன் செயற்படும் S.K. நாதனின் இவ் மானுட மருந்துவ சேவை சிறப்பானதாகும்

அண்மையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு தற்போது தட்டுப்பாடு நிலவும் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள்  தற்போதைய யாழ் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் திரு . நந்தகுமார் Director (Acting), JTH, Dr Nanthakumar  அவர்களிடம் ரூபா 860,000/= பெறுமதியான மருந்து பொருட்கள்  வழங்கி வைக்கப்பட்டது

இதனை விட

  • கிளிநொச்சியில் 5.5 கோடி ரூபாவில் அமைக்கப்பட்ட கண் மற்றும் என்பு முறிவு விடுதிகள்
  • யாழ் பல்கலைகழக மருத்துவப் பீடத்திற்கு  PCR  இயந்திரம்
  • யாழ் போதனாவைத்தியசாலைக்கு CT scan  இயந்திரம் என வடக்கின் மருத்துவ துறைக்கு பல்வேறு வகையில் உதவிகளை வழங்கியுள்ளார்
  • Covid 19 நிலவிய போது மருத்துவ பொருட்கள் , பாதுகாப்பு உடைகள் மற்றும் மருத்துவ இயந்திரங்கள் உபகரணங்கள் என்பனவற்றை வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது

இவ்நிகழ்வில் வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி , வைத்திய நிபுணர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், மருந்தாளர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் வைபவ ரீதியாக பெற்றுக் கொண்டார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4