பொலிஸார் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு

Mayoorikka
3 years ago
பொலிஸார் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு

 முன்னிலை சோசலிசக் கட்சியினால் கொழும்பு கோட்டை பொலிஸ் பிரிவில் இன்று மாலை நடத்தப்படவுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்குமாறு பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே குறித்த கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தை தடுத்து உத்தரவிட நீதிமன்றத்திற்கு இயலுமை இல்லை என நீதவான் அறிவித்துள்ளார்.

அமைதியை சீர்குலைக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுமாயின், பொலிஸாருக்குள்ள அதிகாரங்களுக்கு அமைய நடவடிக்கை முன்னெடுக்குமாறு கோட்டை நீதவான் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4