நாடாளுமன்றில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி வாழ்த்து

Prabha Praneetha
3 years ago
நாடாளுமன்றில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி  வாழ்த்து

நாடாளுமன்றில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி கலாநிதி அரீப் அல்வி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு நேற்று விசேட வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி, இரு நாடுகளுக்கிடையில் நிலவுகின்ற உறவை இரு நாட்டினதும் முன்னேற்றத்திற்காக மேலும் வலுப்படுத்துவதே தமது எதிர்பார்ப்பாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ், இலங்கை தற்போதுள்ள பொருளாதார சவால்களை வெற்றிகொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்தி, மிக நெருக்கமாக செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4