அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் அல்-கொய்தா தலைவர் கொல்லப்பட்டார்

Prathees
3 years ago
அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் அல்-கொய்தா தலைவர் கொல்லப்பட்டார்

ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-கொய்தாவின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரியை அமெரிக்கா கொன்றதாக அதிபர் ஜோ பிடன் உறுதிப்படுத்தியுள்ளார்.

11 ஆண்டுகளுக்கு முன்பு ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதில் இருந்து அல்கொய்தா அமைப்பிற்காக சர்வதேச அளவில் தோன்றிய ஒரே தலைவராக ஜவாஹிரி அறியப்படுகிறார்.

ஆப்கானிஸ்தானின் காபூலில் பாதுகாப்பான வீட்டில் இருந்தபோது அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜவாஹிரி தனது 71 வயதில் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜவாஹிரி "அமெரிக்க குடிமக்களுக்கு எதிரான கொலை மற்றும் வன்முறையின் தடத்தை செதுக்கியுள்ளார்" என்று பிடன் கூறினார்.

"இப்போது நீதி வழங்கப்பட்டுள்ளது, இந்த பயங்கரவாத தலைவர் இப்போது இல்லை," என்று அவர் மேலும் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4