மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்பு தீவின் தென்மேற்குப் பகுதியிலும் மழை அதிகரிக்கும்

Prabha Praneetha
3 years ago
 மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்பு தீவின் தென்மேற்குப் பகுதியிலும் மழை அதிகரிக்கும்

தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி நிலைமைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று  முதல் அடுத்த சில நாட்களில் மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் தீவின் தென்மேற்குப் பகுதியிலும் மழை மற்றும் காற்றின் நிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் சில இடங்களில் 100 மி.மீற்றருக்கு மேல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4