இன்று ஆடி மாத வளர்பிறை சதுர்த்தி 01.08.2022

Prasu
1 year ago
இன்று ஆடி மாத வளர்பிறை சதுர்த்தி 01.08.2022

தெய்வ வழிபாட்டிற்குரிய ஆடி மாத வளர்பிறை சதுர்த்தி தினத்தில் விநாயகருக்கு விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு இனிவரும் காலங்களில் புதிதாக ஈடுபடும் காரியங்கள், முயற்சிகள் அனைத்திலும் தடை தாமதங்கள் இன்றி சிறப்பான பலன்களைத் தரும். 

ஆக்கப்பூர்வமான சிந்தனை திறன், சிறந்த வாக்கு வன்மை ஏற்பட்டு புகழ், செல்வாக்கு ஏற்படும். தக்க சமயங்களில் சக மனிதர்களின் உதவிகள் கிடைக்கப் பெறுவார்கள். 

நீண்ட காலமாக வாட்டி வதைக்கின்ற நோய்கள் குணமாகும். புதிய வேலைக்கான முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு விரும்பியபடி வேலை கிடைக்கும். 

தொழில், வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல தன லாபங்கள் கிடைக்கும். திருமணம் தாமதமாகி கொண்டு வருபவர்களுக்கு கூடிய விரைவில் நல்ல வரன் அமைந்து திருமணம் நடைபெறும். 

நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு அமைவதற்கான நிலையை உண்டாக்கும்.