தொல்பொருள் திணைக்களத்தின் குழுவொன்று இன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம்

Kanimoli
3 years ago
தொல்பொருள் திணைக்களத்தின் குழுவொன்று இன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம்

தொல்பொருள் திணைக்களத்தின் குழுவொன்று இன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம் செய்துள்ளது.

இந்த விசாரணைக்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க தெரிவித்துள்ளார்.

அவர்கள் ஜனாதிபதி மாளிகையில் கலாசார மற்றும் வரலாற்றுப் பொருட்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் அழிவுகளை பொலிஸாரின் கோரிக்கையின் அடிப்படையில் மதிப்பீடு செய்யவுள்ளனர்.

ஜனாதிபதி மாளிகையில் தொல்பொருள் திணைக்களம் தொல்பொருட்கள் மற்றும் கலாச்சார சொத்துக்களை வைத்திருக்கவில்லை.

இருப்பினும் பொருட்களின் பட்டியல் ஆய்வு செய்யப்பட்டு அதில் இல்லாத பொருட்களின் விபரங்கள் பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் குழு ஜனாதிபதி மாளிகையில் விசாரணை நடத்தி, சேதத்தை மதிப்பிட்டு, ஜனாதிபதியின் செயலாளர், பொலிஸார் மற்றும் பிற பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என் அவர் குறிப்பிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4