இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தரவுள்ள சீன விஞ்ஞான ஆய்வுக்கப்பல்- இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

Nila
3 years ago
இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தரவுள்ள சீன விஞ்ஞான ஆய்வுக்கப்பல்- இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

சீனாவின் விஞ்ஞான ஆய்வுக் கப்பல் ஒன்று இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளதாக தெரிவித்துள்ளது.

எனினும் இந்த கப்பல் தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று இந்திய தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் ஆகஸ்ட் 11ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரும் சைனாஸ் யுவான்வாங்-5 என்ற இந்த கப்பல் ஆகஸ்ட் 17ஆம் திகதி வரை துறைமுகத்தில் தரித்து நிற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த கப்பல் இந்தியப் பெருங்கடல் மண்டலத்தின் வடமேற்குப் பகுதியில் செயற்கைக்கோள் ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பில் இருந்து சுமார் 250 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் அதிக வட்டியுடனான சீன கடனுதவியில் நிர்மாணிக்கப்பட்டது. பின்னர் சீனாவிற்கான கடனை திருப்பிச் செலுத்த முடியாமையால், 99 வருட குத்தகைக்கு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சைனாஸ் யுவான்வாங்-5 விண்வெளி கண்காணிப்பு கப்பல் விண்வெளி தரை தகவல் பரிமாற்றத்தை செயல்படுத்தி வருகின்றது.

அத்துடன் செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதை நிர்ணயம் மற்றும் அணுகலுக்கு முக்கியமான தகவல் ஆதரவை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4