குறைக்கப்படுகின்றது எரிபொருளின் விலை?

Prabha Praneetha
3 years ago
குறைக்கப்படுகின்றது எரிபொருளின் விலை?

எதிர்காலத்தில் எரிபொருள் விலை குறைவடையக்கூடும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

உல சந்தையில் தற்போதைய விலை நிலவரத்தின் படி எதிர்காலத்தில் எரிபொருள் விலை மேலும் குறைவடையும் வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம், அடுத்த எரிபொருள் விலைத் திருத்தத்தின் மூலம் எரிபொருள் விலை குறையக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக, அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருட்களின் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு எரிபொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுமாக இருந்தால், அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகளும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4