யாழில் வழமைக்கு திரும்பிய பேருந்து சேவைகள்!

Mayoorikka
3 years ago
யாழில் வழமைக்கு திரும்பிய பேருந்து சேவைகள்!

யாழ்ப்பாணத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை பணியாளர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

அதேவேளை, யாழ். மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் இன்று முதல் 50 வீதமளவில் இயங்குமென யாழ். மாவட்ட பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பேருந்து நிறுவனங்களின் இணையத்தின் தலைவர் பொ.கெங்காதாரன் தெரிவித்த்துள்ளார்.

இதற்கமைய யாழ்ப்பாணத்தில் பேருந்துகள் சேவையில் ஈடுபடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4