ஜனாதிபதி மாளிகையின் தொல்பொருள் சேதம் தொடர்பில் விசாரணை

Mayoorikka
3 years ago
ஜனாதிபதி மாளிகையின் தொல்பொருள் சேதம் தொடர்பில் விசாரணை

ஜனாதிபதி மாளிகையிலுள்ள தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை சேதமாக்கியமை தொடர்பில் நாளைய தினம்(27) விசாரணை நடத்தப்படும் என தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விசாரணைகளுக்காக மேல் மாகாண பிராந்திய அலுவலக அதிகாரிகளைக் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், பேராசிரியர் அனுர மனதுங்க தெரிவித்தார்.
 
ஜனாதிபதி மாளிகையின் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சேதங்கள் தொடர்பிலான விசாரணைகள் இதுவரை நிறைவு செய்யப்படவில்லை எனவும் சேத மதிப்பீட்டு நடவடிக்கைள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பணிப்பாளர் நாயகம் கூறினார்.

எனவே சேத மதிப்பீடுகள் தொடர்பில் பரப்பப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய, ஜனாதிபதி மாளிகையில் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொண்டதன் பின்னர், சேத விபரங்கள் தொடர்பில் தயாரிக்கப்படும் அறிக்கையானது ஜனாதிபதியின் செயலாளர், பொலிஸார் மற்றும் ஏனைய பாதுகாப்பு பிரிவினரிடம் கையளிக்கப்படும் என பேராசிரியர் அனுர மனதுங்க தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4