காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான இராணுவத்தினரின் திடீர் தாக்குதலின் பின்னணி வெளியாகியது!

Nila
3 years ago
காலிமுகத்திடல்   போராட்டக்காரர்கள் மீதான இராணுவத்தினரின் திடீர் தாக்குதலின் பின்னணி வெளியாகியது!

கொழும்பு காலிமுகத் திடல் “கோட்டா கோ கம’வில் நள்ளிரவு பாரியளவில் இராணுவம், அதிரடிப்படை குவிக்கப்பட்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டு, அப்பகுதியை படையினர். முழுமையாகக் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், படை நடவடிக்கையின்போது ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அத்துடன் சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள் காலிமுகத்திடல் பகுதிக்கு செல்லமுடியாது தடுக்கப்பட்டுள்ளனர்.

அறவழியில் போராடிய தங்களை படையினர் கடுமையாக தாக்கினர், இது அரச பயங்கரவாதம் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

104 நாட்களாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலி முகத்திடல் போராட் ட காளத்தில் நள்ளிரவைத் தாண்டியதும் அதிகாலை 1.00 மணியளவில் படை நடவடிக்கை ஆரம்பமானது.

இதற்கு போராட்டக்காரர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். எனினும், அவர்கள் பலவந்தமாக விரட்டப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

குறிப்பாக, ஊடகவியலாளாளர்களை தாக்கும் போது, பாதுகாப்பு தரப்பினர் ஒரு விடயத்தை கூறியுள்ளார்கள் அதாவது யாரையும் உள்ளே விட வேண்டாம் என்று மேலிடத்தில் இருந்து உத்தரவு கிடைத்துள்ளது .

அதன்படி தான் நாங்கள் செயற்பட்டு கொண்டிருக்கின்றோம் என்று கூறியவாறு கெட்ட வார்த்தைகளால் பேசிய வண்ணம் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தவாறு தாக்கினார்கள்

மேலும், அமைதியான வழியில் ஏற்படும் போராட்டங்களை ஆயுதங்களை கொண்டு அகற்றியமை அரசாங்கத்தின் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

எனவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்தை கையில் எடுத்து இப்படியான ஒரு செயற்பாட்டை ஏற்படுத்துவது ஆச்சரியத்திற்குரியது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4