LANKA4.COM ஊடகப் பிரிவு SWISS கிளை விடுக்கும் தகவல்!
Kanimoli
3 years ago

இன ஒற்றுமைக்கு பிற இனங்கள் தானாக திரண்டுவரும் வேளையில், இனத்துவேசம் காட்டும் சில தமிழ், சிங்கள, இஸ்லாமிய பதிவுகளைத் திட்டமிட்டோ அல்லது அறிவற்ற அரைவேக்காட்டுத் தனமாகவோ பதிவு செய்யும், இன, மொழி, இயக்க, கட்சி வியாபாரிகளை வேரோடு கழையாமல் இலங்கை விடியாது.
இதை செய்தாலே ரணிலுக்கு வெற்றி நிச்சயம். நாட்டில் வேலி இல்லாமல் பயிர் செய்யலாம்.
காவற்படைகளோ, ஏவற்படைகளே தேவை இல்லை. இந்த அரை வேக்காடுகளின் ஆணிவேர் துவேச பள்ளிக்கூடம் செல்லாத பணம், பதவி, பட்டம், விரும்பும் விட்டில் பூச்சிகளிடமே உள்ளது. இதனை தண்டித்தால் நாடு முதற்படியில் விரைவாக முன்னேறும். மக்களிற்க்கு சுபீட்ச வாழ்வு கிடைக்கும்.
- LANKA4.COM ஊடகப் பிரிவு SWISS கிளை



