ஜனாதிபதி ரணிலின் கீழ் 25 பேர் கொண்ட அமைச்சரவை -இளம் எம்.பி.க்களுக்கு வாய்ப்பு!

Nila
3 years ago
ஜனாதிபதி ரணிலின் கீழ் 25 பேர் கொண்ட அமைச்சரவை -இளம் எம்.பி.க்களுக்கு வாய்ப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசில் பணியாற்றுவதற்கு 20 – 25 பேர் கொண்ட அமைச்சரவை அடுத்த சில நாட்களுக்குள் நியமிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தில் பொறுப்புகள் வழங்கப்படவுள்ளதாகவும், அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவார் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சியிலிருந்து எந்தத் தலைவரும் பிரதமர் பதவியை ஏற்கத் தயாராக இல்லை என்றால், பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படும்.

அரசியலமைப்பின் படி, அமைச்சரவையின் அளவு 30ஐ தாண்டக்கூடாது. எனவே 20-25 பேர் கொண்ட அமைச்சரவை நியமிக்கப்படும்.

மேலும் புதிய அரசாங்கம் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் மற்றும் விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கைக்கான உரங்களை வழங்குதல் ஆகியவை குறித்து கவனம் செலுத்தும்.

மேலும், தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட நிதி உதவியைப் பெறுவதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) அரசாங்கம் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4