முல்லைத்தீவில், வீட்டில் பதுக்கி வைத்திருந்த 830 லீற்றர் டீசலுடன் ஒருவர் கைது!

Reha
3 years ago
முல்லைத்தீவில், வீட்டில் பதுக்கி வைத்திருந்த 830 லீற்றர் டீசலுடன் ஒருவர் கைது!

முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியில் உள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 830 லீற்றர் டீசலுடன், சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டை சோதனைக்கு உட்படுத்தியபோது, 4 பீப்பாய்களில்  பதுக்கிவைக்கப்பட்டிருந்த 830 லீற்றர் டீசல் மற்றும் 30 லீற்றர் மண்ணெண்ணைய் என்பன மீட்கப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், எதிர்வரும் 21 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டு, காவல்துறையால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4