பொதுமக்களுக்கு அவசர நிவாரணம்: ரணில் அதிரடி முடிவு

Mayoorikka
3 years ago
பொதுமக்களுக்கு அவசர நிவாரணம்: ரணில் அதிரடி முடிவு

பொருளாதார நெருக்கடியால் சிரமப்படும் பொதுமக்களுக்கு எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் அவசர நிவாரண வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று (16) காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

ஓகஸ்ட் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிவாரண வரவு செலவுத் திட்டத்தில் இருந்து அதிக தொகையை இதற்காக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் மற்றும் உரங்களை முறையாகவும் உடனடியாகவும் வழங்குவதற்கு கலந்துரையாடலில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துமாறு பதில் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4