துள்ளிக்குதித்த உறுப்பினரை அடக்கிய ஜீவன்

Kanimoli
3 years ago
துள்ளிக்குதித்த உறுப்பினரை அடக்கிய ஜீவன்

  நோர்வூட் பிரதேச சபையின் இ.தொ.கா உறுப்பினர் சூசை அலக்ஸாண்டர் எரிவாயு சிலிண்டர்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்த வரிசையில் நிற்கும் பொது மகன் ஒருவரை அச்சுறுத்தி, தாக்க செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

இந் நிலையில், சூசை அலக்ஸாண்டர் மீது விசாரணை நடைப்பெறும் என தெரிவித்த ஜீவன், அதுவரை அவரை கட்சியில் இருந்து இடைநிறுத்துவதாகவும் இ.தொ.காவின் பொதுசெயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அதோடு நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர் சூசை அலக்ஸாண்டர் மீது எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட ஒழுக்காற்று குழு, வெகுவிரைவில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக காங்கிரஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதுபோன்ற செயல்களுக்கு இ.தொ.கா ஒருபொழுதும் அனுமதியளிக்காது என்பதுடன், சூசை அலக்ஸாண்டரின் சகல கட்சி உறுப்புரிமைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக நீக்குவதாகவும் இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4