பிரதமரின் வீட்டின் அருகில் ஊடகவியலாளர்கள் நால்வர் மீது தாக்குதல்

Prathees
3 years ago
பிரதமரின் வீட்டின் அருகில் ஊடகவியலாளர்கள் நால்வர் மீது தாக்குதல்

பிரதமரின் வீட்டின் அருகில் ஊடகவியலாளர்கள் நால்வர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நியூஸ்ஃபெஸ்ட் ஊடகவியலாளர்கள் மீதே பாதுகாப்புத் தரப்பினர் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சம்பவ இடத்தில் ஏனைய ஊடகவியலாளர்களும் இருந்த போதும் மேற்படி ஊடகவியலாளர்களைத் தேடிவந்து தாக்கியுள்ளதாக தெரியவருகின்றது.  

இதில் காயமடைந்த ஊடகவியலாளர்கள் நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் ஊடகவியலாளர்கள் தாக்கப்படும் வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.

அதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்துக்கு அருகில் பதற்ற நிலை நிலவுவதாகவும் மீண்டும் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4