சப்ரகமுவ மாகாணம் மற்றும் நுவரெலியா,கண்டி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்

Kanimoli
3 years ago
சப்ரகமுவ மாகாணம் மற்றும் நுவரெலியா,கண்டி மாவட்டங்களில்  மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மாகாணம் மற்றும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், தென் மாகாணத்திலும் அவ்வப்போது காற்று (40-50) கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4