ஹோமாகம மாகம்மன பிரதேச தீ விபத்தில் உயிருக்காக போராடிய சிறுமி மரணம் !

Nila
3 years ago
ஹோமாகம மாகம்மன பிரதேச  தீ விபத்தில்  உயிருக்காக போராடிய சிறுமி மரணம் !

கடந்த 25 ஆம் திகதி இரவு ஹோமாகம மாகம்மன பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றின் கீழ்த்தளத்தில் உள்ள அறையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தீக்காயங்களுக்கு உள்ளான சிறுமி  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லேடி ரிட்ச்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆறு வயதுடைய ரிதுஷி ரணசிங்க என்ற சிறுமியே உயிரிழந்துள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீவிபத்து இடம்பெற்ற போது குறித்த ஆறு வயது சிறுமியின் தாய், தந்தை மற்றும் மூத்த சகோதரி ஆகியோர் அறைக்குள் இருந்துள்ளதுடன், அவர்கள் ஹோமாகம ஆதார வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அவர்களுள் குறித்த சிறுமியின் தந்தை உயிரிழந்ததுடன் தாய் மறுநாளும் மற்றும் மூத்த சகோதரி சம்பவம் நடந்த மூன்று நாட்களுக்குப் பிறகும் உயிரிழந்திருந்தனர்.

படுகாயமடைந்த ஆறு வயது சிறுமி லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதுடன் நேற்று பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4