அவுஸ்திரேலிய வீரர்களால் இலங்கைக்கு கிடைத்த பெருமை!

Nila
3 years ago
அவுஸ்திரேலிய வீரர்களால்  இலங்கைக்கு கிடைத்த பெருமை!

அவுஸ்திரேலிய வீரர்களுக்கு இலங்கையில் கிடைத்துள்ள வரவேற்பு மிகவும் பாராட்டத்தக்கது எனவும், அவுஸ்திரேலியாவில் இலங்கைக்கு மிகச் சிறந்த முன்னுதாரணம் உள்ளதெனவும் அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் பிரதம நிறைவேற்று அதிகாரி நிக் ஹோக்லி பாராட்டியுள்ளார்.

அவுஸ்திரேலியர்கள் வருகை தருவதற்கு இலங்கை ஒரு நல்ல நாடு என்று நீங்கள் தனிப்பட்ட முறையில் கூற முடியுமா? என விசேட நிகழ்ச்சி ஒன்றில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை கட்டாயம் பார்க்க வேண்டிய நாடாக பெயரிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய வீரர்களுக்கு இலங்கையில் கிடைத்துள்ள வரவேற்பு மிகவும் பாராட்டத்தக்கது.

இலங்கையில் அவுஸ்திரேலிய வீரர்கள் பெற்ற அங்கீகாரம் மிகவும் மதிப்பு வாய்ந்தது. அதை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்.

இலங்கையின் விளையாட்டு ரசிகர்கள் எங்களின் வருகையைப் பாராட்டியதற்கான அடையாளங்கள் அவுஸ்திரேலியப் பத்திரிகைகளில் கூட பிரசுரிக்கப்பட்டன.

“எங்களுக்கு மிகவும் அன்பான வரவேற்பு கிடைத்தது. நான் எனது குடும்பத்துடன் இலங்கைக்கு வர ஆர்வமாக உள்ளேன். அவுஸ்திரேலியாவில் இலங்கைக்கு மிகச் சிறந்த முன்னுதாரணம் உள்ளது. இலங்கை கட்டாயம் பார்க்க வேண்டிய நாடு.” என அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4